Enable Javscript for better performance
"நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதய நோய்களுக்கு சிகிச்சை'- Dinamani

சுடச்சுட

    

    "நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இதய நோய்களுக்கு சிகிச்சை'

    By DIN  |   Published on : 25th September 2019 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இதய நோய்களுக்கு நவீன தொழிநுட்பங்கள் மூலம் உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என்று இதயநோய் வல்லுநர் ராகவேந்திரபெலகி தெரிவித்தார்.
    உலக இதய தினத்தையொட்டி, பெங்களூரில் செவ்வாய்க்கிழமை விக்ரம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதய நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது: சர்வதேச அளவில் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய்க்கு உரிய நேரத்தில் சிகிச்சை பெறாததால் பலர் இறக்க நேரிடுகிறது. தற்போது இதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பல நவீன தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. இதை கொண்டு உரிய சிகிச்சை அளித்தால் இதய நோய்களை குணமாக்கலாம் என்றார்.
    நிகழ்ச்சியில் இதயநோய் வல்லுநர்கள் ரங்கநாத்நாயக், நரேந்திரா, பதம்குமார், கிரீஷ் கோடுபோலே, விக்ரம் மருத்துவமனையின் செயல் அதிகாரி சோமோஷ்மிட்டல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai