மேலவையில் பட்டதாரி உறுப்பினர்களுக்கான தேர்தல்: அக்.1 முதல் வாக்காளர் பெயர் சேர்ப்பு

அடுத்தாண்டு ஜூலை மாதம் மேலவையில் ஆசிரியர், பட்டதாரி  உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி

அடுத்தாண்டு ஜூலை மாதம் மேலவையில் ஆசிரியர், பட்டதாரி  உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி, அக்-1-ஆம் தேதி முதல் நவ.6-ஆம் தேதி வரை வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
அடுத்த ஆண்டு ஜூலை மாதம் மாநிலத்தில் உள்ள ஆசிரியர், பட்டதாரிகள் தொகுதிகளுக்கான சட்ட மேலவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே ஆசிரியர், பட்டதாரிகள் தொகுதிக்கான வாக்காளர் பெயர் சேர்க்கும் பணி அக். 1 ஆம் தேதி தொடங்கி, நவ. 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பெயர் சேர்க்கும் பணி முடிந்தவுடன், பட்டியலை இறுதி செய்து டிச. 30-ஆம் தேதி வெளியிடப்படும். கடந்த தேர்தலின் போது தங்களின் பெயர்களை சேர்த்து கொண்டவர்கள் இந்த தேர்தலிலும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். 
ஆசிரியர் தொகுதியில் தங்களின் பெயர்களை சேர்ப்பவர்கள் ஆசிரியர்களாக குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கும் போது, பணி அனுபவத்திற்கான பிரமாண பத்திரத்தையும், வசிக்கும் இடம் குறித்த ஆவணங்களை இணைக்க வேண்டும். பெங்களூரு, பெலகாவி, கல்புர்கி உள்ளிட்ட மாவட்டங்களில் மண்டல ஆணையர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பெயர்கள் பதிவு செய்யும் தேர்தல் அதிகாரிகளாகப் பணியாற்றுவார்கள்.
மேலும் இடைத் தேர்தலில் யார் வேண்டுமானலும் போட்டியிட மனு தாக்கல் செய்யலாம். பரிசீலனைக்கு பிறகே மனுவை ஏற்றுக் கொள்வதும், கைவிடப்படுவதும் தெரியவரும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் குறித்த விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால், அதுகுறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com