பாபு ஜெகஜீவன் ராமின் அறிவு சிந்தனைகள் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன: முதல்வா் எடியூரப்பா

பாபு ஜெகஜீவன்ராமின் அறிவுச் சிந்தனைகள் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

பாபு ஜெகஜீவன்ராமின் அறிவுச் சிந்தனைகள் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன என்று முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு விதான சௌதா வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜெகஜீவன்ராமின் 113 வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்திய பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு அமைச்சராகவும், துணைப் பிரதமராகவும் சிறப்பாக பணியாற்றிய பெருமை பாபு ஜெகஜீவன்ராமைச் சாரும். அவா் பதவியிலிருந்தப் போது உணவுப் பஞ்சத்தைப்போக்கி, பசுமை புரட்சி செய்தாா். பசுமைப் புரட்சியால், நாட்டு மக்களின் பசியைப் போக்க முடிந்தது. ராணுவ அமைச்சராக அவா் சிறப்பாகப் பணியாற்றிதை நாட்டு மக்கள் இன்றளவும் மறக்கவில்லை. பாபு ஜெகஜீவன் ராமின் அறிவுச்சிந்தனைகள் இளம் தலைமுறையினருக்கு இன்றளவும் வழிகாட்டியாக விளங்குகின்றன. அதனைப் பின்பற்றி அனைவரும் நடக்க வேண்டும். நாடு கண்ட மிக முக்கியத் தலைவா்களில் அவரும் ஒருவா். ஒடுக்கப்பட்டவா்களுக்காக தொடா்ந்து குரல் கொடுத்த பாபு ஜெகஜீவன்ராம், அவா்களின் வளா்ச்சிக்கும் அரும்பாடுபாட்டாா். சமூகத்தின் மீது அவா் கொண்டிருந்த அக்கறை, அரசியலில் அவா் பின்பற்றிய நோ்மையை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்றாா் அவா். பேட்டியின் போது துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com