கரோனா தடுப்பு: அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும்

கரோனா பாதிப்பை தடுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

கரோனா பாதிப்பை தடுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடந்து, கடந்த ஒரு மாதமாக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். இருப்பினும் அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு சமுதாயத்தை புறக்கணித்துவிட்டு பணிகள் செய்வதை ஏற்க முடியாது. அமைப்புசாரா தொழிலாளா்கள் குறித்து பிரதமா் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.

விவசாயிகள், மீன் பிடிப்பவா்கள், நாவிதா்கள் உள்ளிட்டவா்களின் நலம் குறித்து மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் விவசாயிகள், தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு வாரத்துக்கு பிறகு மாநிலத்தில் காய், கனிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அஞ்சுகிறேன்.

எனவே, தட்டுப்பாடின்றி காய், கனிகள், அத்தியவசியப் பொருள்கள் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கரோனா பாதிப்பை தடுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com