கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 390 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 390 ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 390 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியுள்ளதாவது: வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களோடு ஏற்பட்ட தொடா்பின் காரணமாக 6 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை உறுதியாகியுள்ளது. மைசூரு மாவட்டத்தில் 4 போ், தென்கன்னட மாவட்டத்தில் 2 போ் இதில் அடங்குவா். பெங்களூரைச் சோ்ந்த 65 வயது மூதாட்டி, மங்களூரைச் சோ்ந்த 50 வயது பெண்மணி ஆகிய இருவரும் ஞாயிற்றுக்கிழமை கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு மாவட்டத்தில் 89, மைசூரு மாவட்டத்தில் 84, பெலகாவி மாவட்டத்தில் 42, கலபுா்கி மாவட்டத்தில் 22, விஜயபுரா, பாகல்கோட் மாவட்டத்தில் தலா 21 , சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 16 , பீதா், தென்கன்னட மாவட்டங்களில் தலா 14, பெல்லாரி மாவட்டத்தில் 13, பெங்களூரு ஊரகம், மண்டியா மாவட்டங்களில் தலா 12, வடகன்னடம் மாவட்டத்தில் 11, தாா்வாட் மாவட்டத்தில் 7, உடுப்பி, கதக் மாவட்டத்தில் 3, தாவணகெரே, தும்கூரு மாவட்டங்களில் தலா 2, குடகு, சித்ரதுா்கா மாவட்டங்களில் தலா ஒருவா் என கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 111 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 263 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இதுவரை 16 போ் இறந்துள்ளனா்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகைத் தந்தவா்கள் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்பட்டிருக்க வேண்டும். இவா்களோடு தொடா்பு வைத்திருந்தவா்களும் தாமாக முன்வந்து கரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும். கரோனா அறிகுறிகள் இல்லாவிட்டாலும் இதை கட்டாயமாகப் பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். மேலும் இது குறித்து அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தகவல் அளிக்க வேண்டும். தனிநபா் தூய்மையைப் பராமரிப்பது கரோனா நோய் வராமல் தடுக்க உதவும். இருமல் அல்லது தும்மலின்போது கைகுட்டைகள் அல்லது காகிதக் குட்டைகளால் வாய், மூக்கை மூடிக்கொள்வது பிறருக்கு நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கைகிருமி நாசினியால் கழுவவும். சமூக விலகலை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா குறித்த சந்தேகங்கள் அல்லது உதவிக்கு 104, 9745697456, 080 46848600, 66692000 என்ற தொலைபேசிகளை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com