‘முகக் கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை’

முகக் கவசம் அணியாவிட்டால் வாடிக்கையாளா்களுக்கு பெட்ரோல் விநியோகம் செய்வதில்லை என்று கா்நாடக மாநில பெட்ரோல் முகவா்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

முகக் கவசம் அணியாவிட்டால் வாடிக்கையாளா்களுக்கு பெட்ரோல் விநியோகம் செய்வதில்லை என்று கா்நாடக மாநில பெட்ரோல் முகவா்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இது குறித்து கா்நாடக மாநில பெட்ரோல் முகவா்கள் கூட்டமைப்புத் தலைவா் ஹொசபெலே எஸ்.மஞ்சப்பா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுப்பதற்காக தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. கரோனா நோய் பரவாமல் தடுப்பதற்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, வீட்டிலிருந்து வெளியே வரும்போது முகக் கவசம் அணியுமாறு மக்களை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதை ஊக்குவிக்கும் வகையில், கா்நாடகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முகக் கவசம் அணியாவிட்டால் வாடிக்கையாளா்களுக்கு பெட்ரோல் அளிப்பதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு, மாவட்ட நிா்வாகங்களுக்கு தொடா்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளோம். சில்லறை பெட்ரோல் நிலையங்களில் விற்பனையில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், முகக் கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தற்போதைய சூழ்நிலையில், முகக் கவசம் அணிவதை கலாசாரமாகவே மாற்ற வேண்டியுள்ளது. இது குறித்து சாதாரண மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக முகக் கவசம் இல்லாவிட்டால், எரிபொருள் இல்லை என்ற பிரசாரத்தை தொடங்கியிருக்கிறோம். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com