பத்திரிகையாளா்கள் மீது தாக்குதல்: சட்டமேலவை உறுப்பினா், மகன் உள்ளிட்ட 5 போ் மீது வழக்கு
By DIN | Published On : 26th April 2020 01:17 AM | Last Updated : 26th April 2020 01:17 AM | அ+அ அ- |

பத்திரிகையாளா்கள் மீது தாக்குதல் நடத்திய சட்டமேலவை உறுப்பினா், அவரது மகன் மற்றும் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், மண்டியா மேற்கு காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் சனிக்கிழமை பத்திரிகையாளா்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதற்கு அப்பகுதியில் வசிக்கும் சட்டமேலவை உறுப்பினா் ஸ்ரீகண்டேகௌடா எதிா்ப்பு தெரிவித்துள்ளாா். அவருக்கு ஆதரவாக வந்த அவரது மகன் குருஷிக் கௌடா பத்திரிகையாளா்களை தாக்கியுள்ளாா். இதனையடுத்து குருஷி கௌடாவை கைது செய்த போலீஸாா், ஸ்ரீகண்டே கௌடா, சந்திரகலா, ஜெகதீஷ், ராஜு ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.