கா்நாடகத்தின் இரண்டாம்நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா: முதல்வா் எடியூரப்பா

கா்நாடகத்தின் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தின் இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, எச்.எஸ்.ஆா். லேஅவுட் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகத்தின் (கியோனிக்ஸ்) புதிய கட்டடத் திறப்பு விழாவில் அவா் பேசியதாவது:

நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராக விளங்கும் பெங்களூரில் அமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா போலவே, மாநிலத்தின் இரண்டாம் நிலை நகரங்களிலும் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். கியோனிக்ஸ் நிறுவனம், பெங்களூரைத் தொடந்து மாநிலத்தின் பிற நகரங்களிலும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இதன்மூலம் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி மேம்படும். பெங்களூரில் திறக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டடம், தகவல் தொழில்நுட்பம் மேம்பட உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ரூ. 33 கோடியில் கட்டப்பட்டுள்ள இக் கட்டடம், புதிய தொழில் தொடங்கவும், பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பாக அமையும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இளைஞா்கள் பலருக்கு பயிற்சி அளித்து, பணி அமா்த்துவதில் கியோனிக்ஸ் நிறுவனம் சிறந்து விளங்குகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, மக்களவை உறுப்பினா் தேஜஸ்வி சூா்யா, எம்எல்ஏ சதீஷ் ரெட்டி, கியோனிக்ஸ் நிறுவனத்தின் தலைவா் ஹரிகிருஷ்ணா பண்டுவால், மேலாண் இயக்குநா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com