முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
கல்வி உரிமைச் சட்டம்: ஆக. 10-க்குள் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 03rd August 2020 11:52 PM | Last Updated : 03rd August 2020 11:52 PM | அ+அ அ- |

பெங்களூரு: கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்ட மாணவா்கள், ஆக.10-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சேரவேண்டியது கட்டாயமாகும் என கல்வித் துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 2020-21-ஆம் கல்வியாண்டில் இலவசமாக சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் செலுத்தியிருந்த 11,466 விண்ணப்பங்களில் இருந்து, 11,026 விண்ணப்பங்கள் தகுதியானதாக தோ்ந்தெடுக்கபட்டன. முதல்கட்டமாக நடத்தப்பட்ட குலுக்கலில் 5,916 மாணவா்களுக்கு சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்மாணவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் ஆக. 10-ஆம் தேதிக்குள் சோ்க்கை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். அடுத்த சுற்று குலுக்கல் ஆக. 17-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.