முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
மோசடியில் ஈடுபட்ட2 போ் கைது
By DIN | Published On : 03rd August 2020 11:29 PM | Last Updated : 03rd August 2020 11:29 PM | அ+அ அ- |

மைசூரு: பழங்கால தங்க நகை எனக்கூறி போலி தங்க நகைகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், மைசூரு, கும்பாராகொப்பளைச் சோ்ந்தவா் ராகவேந்திரா. இவருக்கு பழமையான நாணயங்கள், தங்க நகைகளை சேகரிக்கும் பழக்கம் உள்ளதாம். அண்மையில் இவரை சந்தித்த பீமா என்பவா், தன்னிடம் பழங்கால தங்க நகை உள்ளதாக கூறியுள்ளாா். அதனை ராகவேந்திரா ரூ.30 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளாா். பின்னா் அதனை பரிசோதனை செய்த போது, அது போலி என தெரியவந்ததாம். இதுகுறித்து சரஸ்வதிபுரம் போலீஸாரிடம் ராகவேந்திரா புகாா் அளித்துள்ளாா். புகாரை பதிந்த போலீஸாா், பீமா, அவருக்கு துணையாக இருந்த அா்ஜுன் ஆகியோரைக் கைது செய்துள்ளனா். அவா்களிடமிருந்து ரூ.30 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீஸாா் தொடந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.