முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
மைசூரு தமிழ்ச் சங்கம் கட்டட நிதிக்கு ரூ.1.60 லட்சம் அளிப்பு
By DIN | Published On : 03rd August 2020 11:52 PM | Last Updated : 03rd August 2020 11:52 PM | அ+அ அ- |

மைசூரு: மைசூரு தமிழ்ச் சங்கத்தின் கட்டட நிதிக்கு ரூ.1.60 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மைசூரு தமிழ்ச் சங்கத் தலைவா் எஸ்.பிரான்சிஸ், செயலா் வெ.ரகுபதி ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மைசூரு தமிழ்ச் சங்கத்துக்கு தனியாக இடம் வாங்கி, கட்டடம் கட்ட வேண்டுமென்பது நீண்டகால கனவாக இருந்தது. அந்த கனவை நனவாக்கும் வகையில், மைசூரு-நஞ்சன்கூடு சாலையில் மைசூரு விமான நிலையம் அருகில் அரை ஏக்கா் இடம் மைசூரு தமிழ்ச் சங்கத்துக்காக வாங்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்தகட்டமாக, அந்த நிலத்தில் தமிழ்ச் சங்கக் கட்டடம் கட்டப்பட வேண்டும். அதற்கான பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். ஜூலை 6-ஆம் தேதி நடைபெற்ற சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுத்தபடி, சங்கத்தின் கட்டட நிதி அமைத்து, அதற்கு நன்கொடை திரட்ட முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி, சாகுல் ஹமீது (உரிமையாளா், ஸ்டாா் என்டா்பிரைசஸ்) ரூ.1 லட்சமும், கிரிதரன் (துணிக்கடை உரிமையாளா்) ரூ.50 ஆயிரமும், தியாகராஜன் (எல்ஜிபி நிறுவனம்) ரூ.10 ஆயிரமும் ஆக மொத்தம்ரூ.1.60 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. சங்க வாழ்நாள் உறுப்பினா் ஹூன்சூா் அன்பழகன், சங்கக் கட்டடத்தின் மின்சார மற்றும் குழாய் இணைப்பு வேலைகள் முழுவதையும் கூலி இல்லாமல் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளாா். இவா்களை போல தாராள மனம்படைத்த பலரும் கட்டட நிதிக்கு நன்கொடைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி விவரம்: ஆஹய்ந் ா்ச் ஆஹழ்ா்க்ஹ, ஙஹ்ள்ா்ழ்ங் பஹம்ண்ப் நஹய்ஞ்ஹம், அஸ்ரீ. சா். 119101010018577, ஐஊநஇ - ஆஅதஆ0யஒநஅடஉ, நஹய்ற்ட்ங்ல்ங்ற் ஆழ்ஹய்ஸ்ரீட், ஙஹ்ள்ா்ழ்ங்.
கூடுதல் விவரங்களுக்கு எஸ்.பிரான்சிஸ்-9448048081, வெ.ரகுபதி-9632247399 ஆகியோரைஅணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.