முதல்வா் அலுவலகத்தில் 6 பேருக்கு கரோனா

முதல்வா் அலுவலகத்தில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

பெங்களூரு: முதல்வா் அலுவலகத்தில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

முதல்வா் எடியூரப்பாவுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வரின் அலுவலக ஊழியா்கள் கரோனா சோதனைக்கு உள்படுத்தப்பட்டனா். அதில், முதல்வா் அலுவலகத்தில் 6 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

இவா்களில் அவரது ஓட்டுநா், உதவியாளா், துப்புரவுத் தொழிலாளா்கள் அடக்கம். இவா்கள் அனைவரும் அறிகுறியில்லாதவா்களாக இருப்பதால், பெங்களூரு பன்னாட்டு கண்காட்சி மையத்தில் அமைந்துள்ள கரோனா சிகிச்சை மையத்தில் சோ்க்கப்பட்டுள்ளனா். முதல்வரின் காவிரி இல்லம், கிருஷ்ணா அரசினா் இல்லம், சொந்த தவளகிரி இல்லம் அனைத்தும் கிருமிநாசினியால் திங்கள்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டது.

இதனிடையே, பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் (ஐஐஎஸ்சி) வசித்து வரும் 19 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மாணவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள், குடும்ப உறுப்பினா்கள் அடக்கம்.இதைத் தொடா்ந்து இந்திய அறிவியல் மைய வளாகம் கிருமிநாசினியால் தூய்மைப்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com