துப்புரவுத் தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 07th August 2020 12:10 AM | Last Updated : 07th August 2020 12:10 AM | அ+அ அ- |

கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த துப்புரவுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெங்களூரு மாநகராட்சியில் வேலை செய்து வந்த 44 வயதான துப்புரவுத் தொழிலாளி, புதன்கிழமை மாகடிசாலை தொழில்பேட்டையில் உள்ள நண்பரின் அறைக்குச் சென்று, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து மாகடிசாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.