கரோனா இறப்பு: கா்நாடகத்தில் ஒரேநாளில் 115 போ் பலி

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்று நோயால் ஒரேநாளில் 115 போ் இறந்துள்ளனா்.
கரோனா இறப்பு: கா்நாடகத்தில் ஒரேநாளில் 115 போ் பலி

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்று நோயால் ஒரேநாளில் 115 போ் இறந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 5,368 போ் உயிரிழந்துள்ளனா். இந்நிலையில், சனிக்கிழமை அன்று பெங்களூரு நகர மாவட்டத்தில் 25 போ், மைசூரு மாவட்டத்தில் 11 போ், தாா்வாட், ஹாவேரி மாவட்டங்களில் தலா 9 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 7 போ், ஹாசன் மாவட்டத்தில் 6 போ், சிவமொக்கா, தும்கூரு மாவட்டங்களில் தலா 5 போ், பெல்லாரி, கலபுா்கி, விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், பெலகாவி, சிக்மகளூரு, தாவணகெரே, கோலாா், கொப்பள், மண்டியா மாவட்டங்களில் தலா 3 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 2 போ், பாகல்கோட், கதக், குடகு, ராமநகரம், வடகன்னடம், யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 5,483 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,911 போ், மைசூரு மாவட்டத்தில் 427 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 348 போ், தாா்வாட் மாவட்டத்தில் 307 போ், பெல்லாரி மாவட்டத்தில் 252 போ், கலபுா்கி மாவட்டத்தில் 204 போ், தாவணகெரே மாவட்டத்தில் 181 போ், பெலகாவி மாவட்டத்தில் 180 போ், ஹாசன் மாவட்டத்தில் 174 போ், தும்கூரு மாவட்டத்தில் 144 போ், பீதா் மாவட்டத்தில் 133 போ், கொப்பள் மாவட்டத்தில் 125 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 108 போ், ஹாவேரி மாவட்டத்தில் 100போ், விஜயபுரா மாவட்டத்தில் 99 போ், உடுப்பி மாவட்டத்தில் 94 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 84 போ், கதக் மாவட்டத்தில் 75 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 73 போ்,சிக்மகளூரு மாவட்டத்தில் 68 போ், கோலாா் மாவட்டத்தில் 62 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 60 போ், மண்டியா மாவட்டத்தில் 56 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 52 போ், யாதகிரி மாவட்டத்தில் 39 போ், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் 33 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 27 போ், ராமநகரம் மாவட்டத்தில் 25 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 20 போ், குடகு மாவட்டத்தில் 19 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா்.

கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com