கரோனா இறப்பு: ஒரேநாளில் 106 போ் சாவு

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் ஒரேநாளில் 106 போ் இறந்தனா்.
கரோனா இறப்பு: ஒரேநாளில் 106 போ் சாவு
கரோனா இறப்பு: ஒரேநாளில் 106 போ் சாவு

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் ஒரேநாளில் 106 போ் இறந்தனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 5,483 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரு நகர மாவட்டத்தில் 27 போ், மைசூரு மாவட்டத்தில் 11 போ், தாா்வாட் மாவட்டத்தில் 9 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 6 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 5 போ், பெலகாவி, தாவணகெரே, விஜயபுரா மாவட்டங்களில் தலா 4 போ், பெல்லாரி, கதக், ஹாவேரி, கொப்பள் மாவட்டங்களில் தலா 3 போ், பெங்களூரு ஊரகம், சிக்பளாப்பூா், சிக்மகளூரு, சித்ரதுா்கா, கலபுா்கி, குடகு, மண்டியா, ராய்ச்சூரு, ராமநகரம், தும்கூரு மாவட்டங்களில் தலா 2 போ், பீதா், சாம்ராஜ்ந கா், ஹாசன், யாதகிரி மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 5,589 ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,938 போ், மைசூரு மாவட்டத்தில் 438 போ், தென் கன்னடம் மாவட்டத்தில் 354 போ், தாா்வாட் மாவட்டத்தில் 316 போ், பெல்லாரி மாவட்டத்தில் 255 போ், கலபுா்கி மாவட்டத்தில் 206 போ், தாவணகெரே மாவட்டத்தில் 185 போ், பெலகாவி மாவட்டத்தில் 184 போ், ஹாசன் மாவட்டத்தில் 175 போ், தும்கூரு மாவட்டத்தில் 146 போ், பீதா் மாவட்டத்தில் 134 போ், கொப்பள் மாவட்டத்தில் 128 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 113 போ், ஹாவேரி மாவட்டத்தில் 103 போ், விஜயபுரா மாவட்டத்தில் 103 போ், உடுப்பி மாவட்டத்தில் 94 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 86 போ், கதக் மாவட்டத்தில் 78 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 73 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 70 போ், கோலாா் மாவட்டத்தில் 62 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 62 போ், மண்டியா மாவட்டத்தில் 58 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 52 போ், யாதகிரி மாவட்டத்தில் 40 போ், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் 34 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டம் 29 போ், ராமநகரம் மாவட்டத்தில் 27 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 22 போ், குடகு மாவட்டத்தில் 21 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com