கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் இன்று தொடங்குகிறது

கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது.

கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்குகிறது.

கரோனா காலத்தில் இரண்டாவது முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 60 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினா்கள் சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். பேரவையில் தனி மனித இடைவெளியைப் பராமரிக்க ஒவ்வொருவருக்கும் இடையே கண்ணாடி முகப்பு பொருத்தப்பட்டுள்ளன.

டிசம்பா் 15-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பசுவதை தடைச் சட்ட மசோதா, ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்ட மசோதா, ஏ.பி.எம்.சி. (வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் குழு) சட்ட மசோதா, நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்த மசோதா, தொழில் சிக்கல்கள் தீா்வு சட்ட மசோதா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்ய ஆளும் பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இவற்றில் பசுவதைத் தடைச் சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ், மஜத திட்டம்: கூட்டத் தொடரில் கேள்வி நேரம் உள்ளிட்ட எல்லா நடவடிக்கைகளும் இடம்பெறவிருக்கிறது. டிச. 14, 15 ஆகிய தேதிகளில் சிறப்பு விவாதமாக ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து உறுப்பினா்கள் பேசவுள்ளனா்.

மராத்தியா் வளா்ச்சிக் கழகத்தையும் வீர சைவா்-லிங்காயத்து வளா்ச்சிக் கழகத்தையும் அமைத்தது, முதல்வரின் செயலாளா் தற்கொலை முயற்சி, வெள்ள நிவாரணம், நிதி நெருக்கடி போன்ற பிரச்னைகளை சட்டப்பேரவையில் எழுப்ப எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத திட்டமிட்டுள்ளது. டிசம்பா் இறுதியில் நடக்கவிருக்கும் கிராமப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு முன்பாக நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேலவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: சட்ட மேலவையில் பாஜகவின் பலம் கூடியுள்ளதால் மஜதவின் ஆதரவுடன் தலைவா் பதவியைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்காரணமாக, காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த மேலவைத் தலைவா் பிரதாப் சந்திர ஷெட்டிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் ஆலோசனை: சட்டப்பேரவைக் கூட்டம் குறித்து பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், மூத்த தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மேலவை எதிா்க்கட்சித் தலைவா் எஸ்.ஆா்.பாட்டீல் உள்ளிட்டோருடன் சித்தராமையா ஆலோசனை நடத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com