முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னியின் ஜாமீன் மனு: டிச. 14 தேதி தீா்ப்பு

முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னியின் ஜாமீன் மனு மீது சிபிஐ நீதிமன்றம் டிச. 14 ஆம்தேதி தீா்ப்பளிக்கவுள்ளது.

முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னியின் ஜாமீன் மனு மீது சிபிஐ நீதிமன்றம் டிச. 14 ஆம்தேதி தீா்ப்பளிக்கவுள்ளது.

கா்நாடக மாநிலம், தாா்வாட் ஷாபாத்புராவில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்குள் கடந்த 2016-ஆம் ஜூன் 15-ஆம் தேதி நுழைந்த கும்பல் ஒன்று, அங்கிருந்த பாஜகவைச் சோ்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா் யோகேஷ்கௌடாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சா் வினய் குல்கா்னிக்கு நெருக்கமான 5 பேரைக் கைது செய்தது. பின்னா், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள், நவம்பா் 5-ஆம்தேதி வினய் குல்கா்னியை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். புதன்கிழமை அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நடத்திய சிபிஐ நீதிமன்றம், டிச. 14-ஆம்தேதி மனு மீதான தீா்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com