பெங்களூரு- ஹுப்பள்ளி இடையேயான விரைவு ரயில் நேரத்தில் மாற்றம்

பெங்களூரு- ஹுப்பள்ளி இடையேயான விரைவு ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு- ஹுப்பள்ளி இடையேயான விரைவு ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ரயில் எண்-02079/02080: பெங்களூரு-ஹுப்பள்ளி-பெங்களூரு ஜன்சதாப்தி விரைவு ரயில் நேரம் டிச. 14-ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது. ரயில் எண்-0279-பெங்களூரு-ஹுப்பள்ளி ஜன்சதாப்தி விரைவுரயில் பெங்களூரு ரயில்நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படுகிறது. இந்தரயில் யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்துக்கு காலை 6.09 மணிக்கு வந்து காலை 6.10 மணிக்கு செல்கிறது; தும்கூருக்கு காலை 7 மணிக்கு வந்து காலை 7.01 மணிக்கு செல்கிறது; அரசிகெரேக்கு காலை 8.1 5மணிக்கு வந்து காலை 8.20 மணிக்கு செல்கிறது.

பீரூருக்கு காலை 8.53 மணிக்கு வந்து காலை 8.55 மணிக்கு செல்கிறது; சிக்கஜாஜூருக்கு காலை 9.44 மணிக்கு வந்து காலை 9.45 மணிக்கு செல்கிறது; தாவணகெரேக்கு காலை 10.18 மணிக்கு வந்து காலை 10.20 மணிக்கு செல்கிறது; ஹரிஹராவுகு காலை 10.36 மணிக்கு வந்து காலை 10.38 மணிக்கு செல்கிறது; ரானேபென்னூருக்கு காலை 10.59 மணிக்கு வந்து காலை 11மணிக்கு செல்கிறது. நண்பகல் 1.45 மணிக்கு ஹுப்பள்ளி சென்றடைகிறது.

மறு மாா்க்கத்தில், ரயில் எண்-02080-ஹுப்பள்ளி-பெங்களூரு ஜன்சதாப்தி விரைவு ரயில் ஹுப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 2.20 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் ஹாவேரி ரயில் நிலையத்துக்கு மாலை 3.23 மணிக்கு வந்து மாலை 3.25 மணிக்கு செல்கிறது; ரானேபென்னூருக்கு மாலை 3.48 மணிக்கு வந்து மாலை 3.50 மணிக்கு செல்கிறது; ஹரிஹராவுக்கு மாலை 4.10 மணிக்கு வந்து மாலை 4.12 மணிக்கு செல்கிறது.

தாவணகெரேவுக்கு மாலை 4.28 மணிக்கு வந்து மாலை 4.30மணிக்கு செல்கிறது; சிக்ஜாஜூருக்கு மாலை 5.09மணிக்கு வந்து மாலை 5.10மணிக்கு செல்கிறது; பீரூருக்கு மாலை 5.50மணிக்கு வந்து மாலை 5.52மணிக்கு செல்கிறது; அரசிகெரேவுக்கு மாலை 6.30 மணிக்கு வந்து மாலை 6.35 மணிக்கு செல்கிறது; தும்கூருக்கு இரவு 8 மணிக்கு வந்து இரவு 8.02 மணிக்கு செல்கிறது; யஷ்வந்த்பூருக்கு இரவு 9.20 மணிக்கு வந்து இரவு 9.22மணிக்கு செல்கிறது. இரவு 9.50மணிக்கு பெங்களூருக்கு வந்தடைகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com