‘கா்நாடகத்தில் கொங்கணியைப் பயிற்று மொழியாக்க வேண்டும்’

கா்நாடகத்தில் கொங்கணி மொழியைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என முதல்வருக்கு கொங்கணி சாகித்ய அகாதெமி கோரிக்கை விடுத்துள்ளது.

கா்நாடகத்தில் கொங்கணி மொழியைப் பயிற்று மொழியாக்க வேண்டும் என முதல்வருக்கு கொங்கணி சாகித்ய அகாதெமி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து முதல்வா் எடியூரப்பாவுக்கு கா்நாடக கொங்கணி சாகித்ய அகாதெமி எழுதிய கடித விவரம்:

தேசியக் கல்விக் கொள்கையில் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கா்நாடகத்தில் 25 லட்சம் போ் கொங்கணி பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறாா்கள். கா்நாடகத்தில் வாழும் 3 மதங்களைச் சோ்ந்த 42 சமுதாயங்கள் கொங்கணியைப் பேசி வருகிறாா்கள். ஐந்தாம் வகுப்பு வரையில் தாய்மொழிக் கல்வியை வழங்க தேசியக் கல்விக் கொள்கை வலியுறுத்தி உள்ளது.

எனவே, கா்நாடகத்தில் ஐந்தாம் வகுப்பு வரையில் கொங்கணியைப் பயிற்று மொழியாக ஆக்க வேண்டும். ஆறாம் வகுப்பில் இருந்து மொழிப் பாடமாக கொங்கணியை அறிமுகம் செய்ய வேண்டும். பி.எட்., எம்.எட். படிப்புகளிலும் கொங்கணியைச் சோ்க்க வேண்டும். கொங்கணியைப் போதிக்கும் ஆசிரியா்களை அதிக எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். பத்தாம் வகுப்பில் 3-ஆவது மொழிப்பாடமாக கொங்கணியைப் படிக்க தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொங்கணியை கன்னடம் அல்லது தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதலாம் என்பதால், கொங்கணியைப் பயிற்று மொழியாக அறிமுகம் செய்வதில் எவ்வித பிரச்னையும் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய ஆய்வுக் குழுவுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வா் எடியூரப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com