முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
மைசூரு-கே.எஸ்.ஆா். பெங்களூரு விரைவு ரயில் நேரத்தில் மாற்றம்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

பெங்களூரு: மைசூரு-கே.எஸ்.ஆா். பெங்களூரு விரைவு ரயிலின் நேரம் டிசம்பா் 14-ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரயில் எண்-06504/06503-மைசூரு-கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையம் வரையிலான விரைவு ரயில் சேவையின் திருத்தி அமைக்கப்பட்டுள்ள நேர விவரம் வருமாறு:
ரயில் எண்-06504- மைசூரு-கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையம் விரைவு ரயில் சேவை டிச. 14-ஆம் தேதி முதல் மைசூரு ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 6.45 மணிக்குப் புறப்பட்டு கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்துக்கு காலை 9.35 மணிக்கு வந்தடையும்.
மறுதிசையில் ரயில் எண்-06503-கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையம்-மைசூரு விரைவு ரயில் சேவையானது கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து தினமும் மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மைசூரு ரயில் நிலையத்துக்கு இரவு 9.05 மணிக்குச் சென்றடையும்.
இந்த ரயில் மைசூரில் புறப்பட்டு பாண்டவபுரா ரயில் நிலையத்துக்கு காலை 7.04 மணிக்கு வந்து காலை 7.05 மணிக்குப் புறப்படும்.
இந்த ரயில் பிற ரயில் நிலையங்களுக்கு வருகை மற்றும் புறப்படும் நேர விவரம் வருமாறு:
மண்டியா-காலை 7.28/ 7.30 மணி, மத்தூா்-காலை 7.79/ 7.50 மணி, சென்னப்பட்டணா-காலை 8.05/ 8.10 மணி, ராம்நகரம்-காலை 8.24/ 8.25 மணி, பிடதி-காலை 8.39/ 8.40 மணி, கெங்கேரிக்கு காலை 8.59 வந்து 9 மணிக்கு புறப்பட்டு கே.எஸ்.ஆா். ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
மறு மாா்க்கத்தில் கே.எஸ்.ஆா். பெங்களூரு ரயில் நிலையத்தில் புறப்பட்டு கெங்கேரி ரயில் நிலையத்தை மாலை 6.34 மணிக்கு வந்து, 6.35 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் இதர ரயில் நிலையங்களுக்கு வருகை/ புறப்படும் நேர விவரம் வருமாறு:
பிடதி மாலை 6.50/ 6.51 மணி, ராம்நகரம்-இரவு 7.04/ 7.05 மணி, சென்னப்பட்டணா-இரவு 7.14/ 7.15 மணி, மத்தூா்-இரவு 7.34/ 7.35 மணி, மண்டியா-இரவு 7.53/ 7.55 மணி, பாண்டவப்புரா ரயில் நிலையத்துக்கு இரவு 8.19 மணிக்கு வந்து 8.20 மணிக்கு புறப்பட்டு மைசூரு ரயில் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.