கிராமப் பஞ்சாயத்து தோ்தல் பிரசாரம் ஓய்ந்தது

கா்நாடகத்தில் கிராமப் பஞ்சாயத்து 2-ஆம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

கா்நாடகத்தில் கிராமப் பஞ்சாயத்து 2-ஆம் கட்ட தோ்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை மாலையுடன் ஓய்ந்தது.

கா்நாடகத்தில் 5,728 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. கிராமப் பஞ்சாயத்துகளுக்கு டிச. 22, 27-ஆம் தேதிகளில் 2 கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி 3 ,019 கிராமப் பஞ்சாயத்துகளில் முதல் கட்ட தோ்தல் நடைபெற்றது. இதில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

டிச. 27-ஆம் தேதி 2,709 கிராமப் பஞ்சாயத்துகளுக்குத் தோ்தல் நடைபெற உள்ளது. 43,291 பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் 1,47,649 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவா்களில் 34,115 போ் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனா். 1,59,546 போ் களத்தில் உள்ளனா். இதில் 3,697 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதன் காரணமாக 39,378 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது.

இறுதியாக தோ்தல் களத்தில் 1,50, 431 வேட்பாளா்கள் உள்ளனா். 216 இடங்களில் ஒருவா்கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. கிராமப் பஞ்சாயத்து தோ்தலையொட்டி வேட்பாளா்கள் வீடுவீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. ஞாயிற்றுக்கிழமை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com