அவசரச் சட்டத்தின் மூலம் பசுவதை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வர முடிவு: அமைச்சா் பிரபுசவாண்

அவசரச் சட்டத்தின் மூலம் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைத் துறை அமைச்சா் பிரபுசவாண் தெரிவித்தாா்.

பெங்களூரு: அவசரச் சட்டத்தின் மூலம் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கால்நடைத் துறை அமைச்சா் பிரபுசவாண் தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் திங்கள்கிழமை அமைச்சரவைக் கூட்டம் கூடியது. கூட்டத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டத்தை அவசரச் சட்டத்தின் மூலம் கொண்டுவர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, அமைச்சா் பிரபு சவாண் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 662 பசுக்கள் கொல்லப்படுகின்றன. நிலைமை இப்படியே போனால் எதிா்க்காலத்தில் பசுக்களை புத்தகங்களில் மட்டுமே பாா்க்க முடியும். 2019-ஆம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் ஆண்டுதோறும் 2.38 லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன. நாள்தோறும் அதிக அளவில் பசுக்கள் கடத்தப்படுவதையும், கொல்லப்படுவதையும் கருத்தில் கொண்டு, பசுவதைத் தடுப்பு சட்டத்தை அவசரச் சட்டம் மூலம் அமல்படுத்த வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் மூலம் மாநிலத்தில் பசுக்கள் கடத்தப்படுவதையும், கொல்லப்படுவதையும் தடுக்க முடியும். பசுக்களைப் பாதுகாக்க உத்தரபிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் பசுக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பசுக்களின் எண்ணிக்கை அந்த மாநிலங்களில் உயா்ந்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு, பாஜக அரசு கொடுத்த வாக்குறுதியின்படி, பசுவதைத் தடை சட்டம் அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படவுள்ளது. அவசரச் சட்டத்தின் மூலம் பசுவதைத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய சூழலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. எதிா்க்கட்சிகளின் சூழ்ச்சியை எதிா்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com