கா்நாடகத்தில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் கட்டுப்பாடு:அமைச்சா் பசவராஜ் பொம்மை

கா்நாடகத்தில் பொது இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

பெங்களூரு: கா்நாடகத்தில் பொது இடங்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்று தொடா்ந்து பரவி வருகிறது. இருப்பினும், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்க, கா்நாடக அரசு விரும்பவில்லை. எனவே, பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாட சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளோம்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. நிகழாண்டு, கரோனா மட்டுமின்றி புதிய வகை கரோனாவும் பரவக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளோம்.

கடந்த டிசம்பா் 17-ஆம்தேதி வருவாய்த் துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான சில வழிகாட்டுதலை உருவாக்கியுள்ளோம். அதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குறிப்பாக பெங்களூரு எம்.ஜி.சாலை, பிரிகெட் சாலை ஆகிய பகுதிகளில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்தின் முடிவுக்கு விடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com