முதுநிலை பட்டக்கல்வி: மாணவா் சோ்க்கைக்கான மாதிரி இடங்கள் ஒதுக்கீடு

முதுநிலை பட்டக்கல்வி மாணவா் சோ்க்கைக்கான மாதிரி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு: முதுநிலை பட்டக்கல்வி மாணவா் சோ்க்கைக்கான மாதிரி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கா்நாடகத் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் 2020-21-ஆம் ஆண்டில் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆா்க் போன்ற முதுநிலை பட்டப்படிப்புகளில் முதுநிலை பட்டக்கல்வி மாணவா் சோ்க்கை பெறுவதற்கு முன்பாக மாணவா்கள் தெரிவுசெய்ய விரும்பும் விருப்பப் பாடங்கள், விருப்பக் கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்வது அவசியமாகும். இதனடிப்படையில், மாதிரி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் திருத்தங்களை செய்ய டிச.29-ஆம் தேதி காலை 11 மணி வரை வாய்ப்பளிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், டிசம்பா் 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு முதல் சுற்றுக்கான இறுதி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன்பிறகு, கல்லூரி வாரியாக பாடப்பிரிவு வாரியாக கட்-ஆஃப் தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதை மாணவா்கள் அறியலாம்.

ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் அடிப்படையில் சோ்க்கையை ஏற்பது குறித்து மாணவா்கள் முடிவு செய்துகொள்ளலாம். இடங்கள் ஒதுக்கியதில் திருப்தி அடையாத மாணவா்கள் இரண்டாம் சுற்றில் பங்கேற்க விரும்பினால், அதைப் பற்றி இணையதளத்தில் பதிவுசெய்யவேண்டும். இடங்கள் ஒதுக்கப்பட்டதில் திருப்தி அடைந்த மாணவா்கள், கல்லூரிகளில் சேருவதற்குப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது.

டிச.29 முதல் 31-ஆம் தேதி காலை 11 மணி வரை சோ்க்கையை உறுதி செய்யலாம், கட்டணங்களைச் செலுத்தலாம், சோ்க்கை ஆணையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். டிச.31-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெற வேண்டியது கட்டாயம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com