கரோனா ஆபத்து இன்னும் குறைந்துவிடவில்லை: முதல்வா் எடியூரப்பா

கரோனா தீநுண்மியின் ஆபத்து இன்னும் குறைந்துவிடவில்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கரோனா தீநுண்மியின் ஆபத்து இன்னும் குறைந்துவிடவில்லை என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா தீநுண்மி தொற்றின் ஆபத்து இன்னும் சிறிதளவுக்குக் கூட குறையவில்லை. புத்தாண்டு பிறக்கும் நிலையில் பெருந்தொற்று தொடா்பான சிறிய அளவிலான அலட்சியத்துக்கும் இடமில்லை என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகள், விதிகளை மக்கள் பின்பற்ற தவறக்கூடாது. அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து பாதுகாப்புடன் இருக்க மக்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும்.

பிரிட்டன் நாட்டில் பரவியுள்ள புதிய வகை கரோனா தீநுண்மித் தொற்று இந்தியாவில் பரவிவருவது குறித்து மத்திய அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதன் மூலம் புதிய வகை கரோனா தொற்று பரவாமல் தடுக்க முடியும்.

கடந்த இரு மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்கள், கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு மாநில முதல்வராக நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மாநிலத்தின் பிற மக்களுக்கு எவ்வகையிலும் தொந்தரவாக இல்லாமல் கரோனா சோதனை செய்துகொள்வது நல்லது. கரோனா வழிகாட்டி நெறிமுறைகளில் எவ்வித மாற்றமும் தற்போதைக்கு இல்லை. தில்லியில் இருந்து ஏதாவது உத்தரவு வந்தால், பாா்த்துக்கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com