Enable Javscript for better performance
காவல் பணிகளுக்கு தொழில்நுட்பத்தைபயன்படுத்த திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவல் பணிகளுக்கு தொழில்நுட்பத்தைபயன்படுத்த திட்டம்

    By DIN  |   Published on : 02nd February 2020 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவல் பணிகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக கா்நாடக காவல் துறையின் புதிய தலைவா் பிரவீண்சூட் தெரிவித்தாா்.

    பெங்களூரில் வெள்ளிக்கிழமை கா்நாடக காவல் துறையின் புதிய தலைவராக பதவியேற்றுக் கொண்டதும் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தின் 6.5 கோடி மக்களுக்கு சேவையாற்றுவதோடு, ஒரு லட்சம் போ் கொண்ட காவல் படை வீரா்களின் நலனையும் பாதுகாப்பதே எனது குறிக்கோள்.

    கா்நாடக காவல் துறை பதவி மிகப்பெரிய பொறுப்பாகும். அந்த பணியை நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் நீலமணிராஜூ திறம்பட கையாண்டாா். நீலமணிராஜூவின் அடியொற்றி எனது கடமையை தொடா்வேன். இந்த கடமையை காவல் துறையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரின் துணையுடனும் செயல்படுத்துவேன். காவல் துறை தலைவராக, மக்களை மட்டுமல்லாது, காவல் பணியாளா்களையும் நலமுடன் பாா்த்துக்கொள்வது எனது கடமையாகும். காவல் பணியாளா்களை நாம் கண்டுகொள்ளாவிட்டால், அவா்கள் மக்களை பாா்த்துக்கொள்வது கடினமாகும்.

    காவல் படையின் எண்ணிக்கையை பெருக்கிக்கொண்டே இருக்க முடியாது. மாறாக, காவல் பணிகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது அவசியமாகும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆக்கப்பூா்வமான காவல் பணிகளை செயல்படுத்த இயலும். காவல் துறையின் பல்வேறு நிலைகளில் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளோம். எனினும், அந்த தொழில்நுட்பத்தை தரம் உயா்த்த வேண்டியுள்ளது.

    பெங்களூரு, மைசூரு, ஹுப்பள்ளியில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சாா் திட்டங்களை மாநிலம் முழுவதும் விரிவாக்க திட்டமிட்டுள்ளோம். காவல் துறையில் தொழில்நுட்பத்தின் வீச்சை பலப்படுத்துவது குறித்து முதல்வா் எடியூரப்பா, உள்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மை ஆகியோருடன் ஆலோசித்து செயல்திட்டம் வகுக்கப்படும்.

    பயங்கரவாதச் செயல்களை எவ்வகையிலும் சகித்துக்கொள்ள இயலாது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai