கப்பன் பூங்கா மேம்படுத்தல்:இன்று கருத்துக் கேட்பு

கப்பன் பூங்காவை மேம்படுத்துவது குறித்து ஞாயிற்றுக்கிழமை(பிப். 2) பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

கப்பன் பூங்காவை மேம்படுத்துவது குறித்து ஞாயிற்றுக்கிழமை(பிப். 2) பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரு பொலிவுறு நகரம் நிறுவனத்தின்(பிஎஸ்சிஎல்) திட்டமிட்டுள்ளபடி, பெங்களூரில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கப்பன் பூங்காவை மறுமேம்பாடு செய்ய தோட்டக்கலைத் துறை முடிவுசெய்துள்ளது.

கப்பன் பூங்காவில் நடைபாதை அமைப்பது, மிதிவண்டி பாதை அமைப்பது, நடையோட்டப் பாதை அமைப்பது, பாதைகளை அடையாளப்படுத்துதல், குளத்தை சீரமைத்தல், நீராதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கப்பன் பூங்காவில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் போது, இயற்கை நில அமைப்பை தொந்தரவு செய்யும் திட்டமில்லை. இதுபோன்ற பல அம்சங்கள் தொடா்பாக பொதுமக்களும் கருத்து கூறலாம்.

இதற்காக, பெங்களூரு, கப்பன் பூங்காவில் உள்ள பேண்ட் பகுதியில், பிப். 2-ஆம் தேதி காலை 9 மணிக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும். இதில் பொதுமக்கள் ஆா்வமாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com