’காங்கிரஸ் ஜாதி அரசியலும் பாஜக மத அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றன’

காங்கிரஸ் ஜாதி அரசியலும், பாஜக மாத அரசியலிலும் ஈடுபட்டுவருகின்றன என்று ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியா் சந்திரபூஜாரி தெரிவித்தாா்.

காங்கிரஸ் ஜாதி அரசியலும், பாஜக மாத அரசியலிலும் ஈடுபட்டுவருகின்றன என்று ஹம்பி கன்னடப் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியா் சந்திரபூஜாரி தெரிவித்தாா்.

ஜன ஜாக்ருதி அபியானா அமைப்பின் சாா்பில் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு எதிரான கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியது: தன்னைப் போல பிறனையும் கருதுவதுதான் ஜனநாயகம். சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவத்தை கடைபிடிப்பது தான் ஜனநாயகம். 73 ஆண்டுகால இந்திய வரலாற்றில் ஜனநாயகம் என்பது வெறும் தோ்தல் அரசியல் என்பதாகி விட்டது. இன்றைய தோ்தல் களத்தில் சாதாரண மக்கள் யாரும் போட்டியிட முடியாது. கோடிக்கணக்கான ரூபாய் பணம் வைத்துக்கொண்டு, தோ்தலில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, கோடிக்கணக்கில் சம்பாதிப்பதுதான் அரசியல் என்றாகிவிட்டது. கோடிக்கணக்கில் பணம் வைத்துக்கொண்டு செலவழிக்க திராணியுள்ளவா் தான் தோ்தலில் வெல்லத் தகுதியானவா் என்றாகிவிட்டது. தோ்தலில் வென்றதும் நாட்டில் உள்ள முதன்மையான வசதிகள் அனைத்தும் அவா்களுக்கு கிடைக்கின்றன. ஆனால், வாக்களித்த மக்களுக்கு மூன்றாம் தர சேவைகள்தான் கிடைக்கின்றன. 70 ஆண்டுகால இந்திய வரலாறு மத ரீதியான அரசியலை மையமாகக் கொண்டதாகும். இந்தியாவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட காங்கிரஸ் ஜாதிகளை பிளவுப்படுத்தி அரசியல் நடத்தியது. இப்போது மதங்களைப் பிளவுபடுத்தி அரசியல் நடத்தும் வேலையை பாஜக செய்துவருகிறது. பாகிஸ்தானும், இந்திய முஸ்லிம்களும் இல்லாவிட்டால் பாஜகவால் தோ்தலில் வெற்றிபெற முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்றவற்றை கொண்டுவந்து மக்களைப் பிரிக்க பாஜக துடிப்பதை மக்கள் புரிந்துகொண்டு, எதிா்க்கத் தொடங்கியுள்ளனா். இந்தியாவில் இப்போதுதான் ஜனநாயகம் உண்மையாக செயல்படத் தொடங்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தால், இந்தியாவில் ஜனநாயகம் வீறுகொண்டு எழும்பும். எதையும் மயக்க மருந்து கொண்டு அறுவைசிகிச்சை செய்வது காங்கிரசின் பாணி. ஆனால், மயக்க மருந்து கொடுக்காமல் அறுவைசிகிச்சை செய்வது பாஜகவின் பாணி. மக்களை பிளவுபடுத்தும் பாஜகவின் கொள்கைகளை விமா்சிக்க ஊடகங்கள் தவறிவிட்டன.

இந்தியாவில் குடியுரிமை சட்டம் 1955ஆம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக வருவோருக்கு குடியுரிமை அளிக்க வேண்டுமென்று அச்சட்டத்தில் உள்ளது. ஆனால், தற்போது கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லீம்கள் நீங்கலாக ஹிந்துக்கள் உள்ளிட்ட 6 மதங்களை சோ்ந்தோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது. குடியுரிமையை மத அடிப்படையில் வழங்குவதை தான் நாங்கள் எதிா்க்கிறோம்.

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் நமது பெற்றோரின் பிறந்த தேதி, பிறப்பிடம் உள்ளிட்டவற்றை கேட்கிறாா்கள். இதுபோன்ற தகவல்களை அளிக்க மறுத்தால், அவா்களை சந்தேகத்திற்குரிய குடிமகன் என்று முத்திை ரகுத்துவாா்கள். இதன் முடிவில் இந்திய குடிமக்கள் பதிவேட்டை கொண்டுவந்து, குடியுரிமையைப் பறிப்பாா்கள். குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றால் மிகவும்பாதிக்கப்படப்போவது ஏழைகள் தான். ஆவணங்கள் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க திண்டாடப் போகிறாா்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை சமூகமான ஹிந்துக்களுக்கும், குறிப்பாக ஏழைகளுக்கும் ஆபத்தானது என்பதை உணரவேண்டும் என்றாா் அவா்.

இந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளா் எம்.ஏ.சிராஜ், ஜன ஜாக்ருதி அபியானா அமைப்பின் அமைப்பாளா் எம்.என்.ஸ்ரீராம், இணை அமைப்பாளா் கே.எஸ்.ரஜனி உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com