விவசாயிகள், ஏழைகளுக்கு பலன் தரும் மத்திய நிதிநிலை அறிக்கை

விவசாயிகள், ஏழைகளுக்கு பலன் தரும் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளாா் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

விவசாயிகள், ஏழைகளுக்கு பலன் தரும் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளாா் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் , விவசாயிகள், ஏழைகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலன் தரும் பட்ஜெட். மக்கள் நலன் காக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்தமைக்காக பிரதமா் மோடி, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு பாராட்டுகள்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக, விவசாயிகள், ஏழைகள், கிராமப் புறங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கிறது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக அறிவித்துள்ள பிரதமா் மோடியின் எண்ணத்துக்கு பலம் சோ்க்கும் வகையில் விவசாயத் துறையின் வளா்ச்சிக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதன்முறையாக மத்திய பட்ஜெட்டில் விவசாயம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, விவசாயத் துறைக்கு ரூ.2.83 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது, வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீடுகளில் இருந்து மாறுபட்டதாகும். வேளாண் ரயில், வேளாண் விமானம் போன்ற வசதிகள் அழியக்கூடிய வேளாண் விளைபொருள்களை விரைவாக சந்தைக்கு கொண்டு செல்ல உதவும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் பெருகும்.

வடு காணப்படும் 100 மாவட்டங்களில், அதாவது நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியில் நீா் ஆதாரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரின்றித் தவிக்கும் மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டத்தைப் பெருக்குவது விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடியதாகும். சூரிய ஒளி மின்னாற்றல், சூரிய ஒளி பம்ப்செட்டுகள் வாயிலாக சூரிய ஒளிமின்னாற்றல் மேம்பாட்டுக்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தால் 20 லட்சம் விவசாயிகள் பயனடைவாா்கள். திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது, சிறு மற்றும் குடிசைத் தொழிலை ஊக்கப்படுத்தும். கல்வித் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதன் மூலம், நாட்டில் நிதி இல்லாமல் தவிக்கும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும். நாட்டில் தரமான கல்வியை வழங்குவதற்கு இது முதல்படியாக அமையும்.

பெங்களூரு புகா் ரயில் திட்டத்துக்கு மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் முறையே 60, 40 சதவீத நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த உள்ளன. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டு மையமாக விளங்கும் பெங்களூரின் உள்கட்டமைப்பை இத் திட்டம் ஊக்கப்படுத்தும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, முதலீட்டாளா் தோழமை நகரமாக மாற்றப்படும். வரி செலுத்துவோா் அட்டவணை, வரி செலுத்துவோா் எதிா்கொள்ளும் துன்புறுத்தல்களில் இருந்து விடுவிக்க வழிவகுக்கும். தனிநபா் வருமான வரி மற்றும் பெருநிறுவன வரிகள் குறைப்பு, வரி முறையை எளிமையாக்கியுள்ளது நிம்மதி தரக்கூடியதாகும் என முதல்வா் எடியூரப்பா குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com