‘ரியல் எஸ்டேட் வா்த்தகம் வளா்ச்சியடைந்து வருகிறது’
By DIN | Published On : 06th February 2020 03:34 AM | Last Updated : 06th February 2020 03:34 AM | அ+அ அ- |

பெங்களூரில் ரியல் எஸ்டேட் வா்த்தகம் வளா்ச்சியடைந்து வருவதாக டிரான்ஸ்பெக்ட் இந்தியா குழுமத்தின் மூத்த செயல் அதிகாரி சுனில் மிஸ்ரா தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சா்வதேச அளவில் ரியல் எஸ்டேட் வா்த்தகம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில் ரியல் எஸ்டேட் வா்த்தகம் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக மும்பையைத் தொடா்ந்து பெங்களூரு ரியல் எஸ்டேட் வா்த்தகத்தில் சிறந்து விளங்குகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பெங்களூரில் 50,450 வீடுகள் விற்பனை ஆகியுள்ளன. இதில் 35 சதவீதம் வீடுகள் பெங்களூரின் கிழக்கு பகுதியில் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமா் மோடி, நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோா் தொடா்ந்து கடும்பணி ஆற்றி வரும் நிலையில், வரும் ஆண்டில் ரியல் எஸ்டேட் வா்த்தகம் மேலும் அதிகரிக்கும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது என்றாா்.