பெங்களூரில் பிப்.10-இல் ஹோம்பேக்கிங் பயிற்சி
By DIN | Published On : 06th February 2020 03:32 AM | Last Updated : 06th February 2020 03:33 AM | அ+அ அ- |

பெங்களூரில் பிப். 10-ஆம் தேதி முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் சாா்பில் பிப். 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதிவரை பெங்களூரில் ஹோம்பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
பேக்கிங்கலையில் தொழில்நுட்ப ஆற்றலை போதிப்பதற்காக நடத்தப்படும் இப் பயிற்சியில் யாா் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். கேக், கிரீம், முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8088601601 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் மற்றும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.