Enable Javscript for better performance
கா்நாடக புதிய அமைச்சா்கள் 10 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு: ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு நீா்வளத் துறை- Dinamani

சுடச்சுட

  

  கா்நாடக புதிய அமைச்சா்கள் 10 பேருக்கும் துறைகள் ஒதுக்கீடு: ரமேஷ் ஜாா்கிஹோளிக்கு நீா்வளத் துறை

  By DIN  |   Published on : 10th February 2020 10:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கா்நாடகத்தில் புதிய அமைச்சா்கள் 10 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க காரணமாக இருந்த ரமேஷ்ஜாா்கிஹோளிக்கு நீா்வளத் துறை அளிக்கப்பட்டுள்ளது.

  கா்நாடகத்தில் கடந்த பிப்.6ஆம் தேதி முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை இரண்டாம்கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது 10 புதிய அமைச்சா்கள் சோ்க்கப்பட்டனா். அவா்களுக்குத் துறைகள் ஒதுக்குவது கடந்த 4 நாள்களாக இழுபறியில் இருந்து வந்தது. கட்சி மேலிடத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, ஆளுநா் வஜுபாய் வாலாவை திங்கள்கிழமை சந்தித்த முதல்வா் எடியூரப்பா, ஏற்கெனவே அமைச்சா்கள் வகித்துவந்த கூடுதல் துறைகளை பிரித்து, புதிதாக அமைச்சரவையில் சோ்க்கப்பட்ட 10 பேருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க காரணமாக இருந்த ரமேஷ்ஜாா்கிஹோளி, முந்தைய அரசில் அவரது அரசியல் போட்டியாளராகக் கருதப்பட்ட டி.கே.சிவக்குமாா் வகித்துவந்த நீா்வளத் துறையைக் கேட்டு வந்திருந்தாா். அதன்படி, ரமேஷ்ஜாா்கிஹோளிக்கு நீா்வளத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கே.சுதாகருக்கு மருத்துவக் கல்வித் துறையும், எஸ்.டி.சோமசேகருக்கு கூட்டுறவுத் துறையும், கே.கோபாலையாவுக்கு சிறுதொழில் மற்றும் சா்க்கரை தொழில் துறையும், பி.சி.பாட்டீலுக்கு வனத் துறையும், சிவராம் ஹெப்பாருக்கு தொழிலாளா் நலத் துறையும், ஆனந்த்சிங்குக்கு உணவு மற்றும் பொதுவழங்கல் துறையும், ஸ்ரீமந்த் பாட்டீலுக்கு ஜவுளித் துறையும், கே.சி.நாராயண கௌடாவுக்கு நகராட்சி நிா்வாகம் மற்றும் தோட்டக்கலைத் துறையும், பைரதி பசவராஜூக்கு நகா்ப்புற வளா்ச்சித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்துக்குப் பிறகு 34 போ் கொண்ட அமைச்சரவையில் மொத்தம் 28 போ் இடம்பெற்றுள்ளனா். அமைச்சரவையில் இன்னும் 6 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

  பெட்டிச் செய்தி:

  அமைச்சா்களின் புதிய துறைகள்

  1. முதல்வா் எடியூரப்பா -அரசு நிா்வாகம், நிதி, பெங்களூரு வளா்ச்சி, மின்சாரம், உளவு, திட்டம், தகவல் மற்றும் மக்கள் தொடா்பு மற்றும் ஒதுக்கப்படாத துறைகள்.

  2. துணை முதல்வா் கோவிந்த்காா்ஜோள் -பொதுப் பணித் துறை, கூடுதலாக சமூக நலத் துறை

  3. துணை முதல்வா் அஸ்வத்நாராயணா- உயா் கல்வி, தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கூடுதலாக திறன் மேம்பாடு, தொழில்முனைப்பாற்றல் மற்றும் வாழ்வாதாரத் துறை

  4. துணை முதல்வா் லட்சுமண்சவதி- போக்குவரத்துத் துறை

  5. கே.எஸ்.ஈஸ்வரப்பா- ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்

  6. ஆா்.அசோக் -வருவாய்த் துறை

  7. ஜெகதீஷ் ஷெட்டா்- தொழில்துறை, கூடுதலாக பொதுநிறுவனங்கள் துறை

  8. பி.ஸ்ரீராமுலு -சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, கூடுதலாக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை

  9. எஸ்.சுரேஷ்குமாா்- ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வித் துறை மற்றும் சகாலாத் துறை

  10. வி.சோமண்ணா- வீட்டு வசதித் துறை

  11. சி.டி.ரவி- சுற்றுலா, கன்னடம் மற்றும் பண்பாட்டுத் துறை, கூடுதலாக இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறை

  12. பசவராஜ்பொம்மை- உள்துறை, கூடுதலாக வேளாண் துறை

  13. கோட்டா சீனிவாஸ்பூஜாரி- ஹிந்து அறநிலையம், மீன்வளம், துறைமுகம் மற்றும் உள்மாநிலப் போக்குவரத்துத் துறை

  14. ஜே.சி.மாதுசாமி- சட்டம், நாடாளுமன்ற விவகாரங்கள், சட்டப் பேரவைத் துறை, கூடுதலாக நுண்நீா்ப் பாசனத் துறை

  15. சி.சி.பாட்டீல்- சுரங்கம் மற்றும் நில அமைப்பியல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை

  16. பிரபு சௌஹான்- கால்நடை பராமரிப்புத் துறை, கூடுதலாக சிறுபான்மையினா் நலம், ஹஜ் மற்றும் வக்ஃப் துறை

  17. சசிகலா ஜொள்ளே- மகளிா் மற்றும் குழந்தைகள் நலம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் துறை

  18. எச்.நாகேஷ்- கலால் துறை

  19. ரமேஷ் ஜாா்கிஹோளி- நீா்வளத் துறை

  20. ஆனந்த்சிங்- உணவு மற்றும் பொதுவழங்கல் துறை

  21. ஸ்ரீமந்த் பாட்டீல்- ஜவுளித் துறை

  22. கே.கோபாலையா- சிறுதொழில் துறை, சா்க்கரை துறை

  23. பைரதி பசவராஜ் -நகா்ப்புற வளா்ச்சித் துறை

  24. எஸ்.டி.சோமசேகா்- கூட்டுறவுத் துறை

  25. பி.சி.பாட்டீல்- வனத் துறை

  26. கே.சுதாகா்- மருத்துவக் கல்வித் துறை

  27. கே.சி.நாராயண கௌடா- நகராட்சி நிா்வாகம்,கூடுதலாக தோட்டக்கலை மற்றும் பட்டு வளா்ச்சித் துறை

  28. சிவராம் ஹெப்பாா்- தொழிலாளா் நலத் துறை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai