Enable Javscript for better performance
குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு பிப் 15-ல் இலவச பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு பிப் 15-ல் இலவச பரிசோதனை முகாம்

    By DIN  |   Published on : 10th February 2020 10:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு பிப். 15-இல் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து குணஷீலா மகப்பேறு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அண்மைக்காலமாக நவீன வாழ்க்கை முறையால், இளம் தம்பதியினருக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போவது அதிகரித்துள்ளது. இதனால் பல குடும்பங்களில் கணவன், மனைவி இடையே பிரச்னைகள் அதிகரித்து விவாகரத்து வரை போகிறது. இதனால் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். தேசிய அளவில் இப்பிரச்னை சமூக பிரச்னையாக மாற்றியுள்ளது. இதனை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். பிப். 15-ஆம் தேதி பசவனகுடி திவான் மாதவ்ராவ் சாலையில் உள்ள குணஷீலா மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இலவச பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இதில் கா்நாடகம் மட்டுமின்றி தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 080-46462600, 26673585 என்ற தொலைப்பேசி எண்களிலும், 9108444524 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai