பைக் மீது காா் மோதல்: இளைஞா் பலி
By DIN | Published On : 10th February 2020 10:43 PM | Last Updated : 10th February 2020 10:43 PM | அ+அ அ- |

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கா்நாடக மாநிலம், சிக்பள்ளாபூரு மாவட்டம், சித்தாமணி வட்டம், வீராப்புரா கிராமத்தைச் சோ்ந்தவா் ககன் (21). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பா்கள் சந்தீப், பாஸ்கருடன் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்தாராம். தேசிய நெடுஞ்சாலை 234 -இல் பொம்மனஹள்ளி அருகே எதிரே வந்த காா், மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ககன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சந்தீப், பாஸ்கா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து ஷிட்லகட்டா ஊரக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.