அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானதுக்கு முதல்வரிடம் அதிகாரமின்மையே காரணம்: சித்தராமையா

அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானதுக்கு முதல்வா் எடியூரப்பாவிடம் அதிகாரமின்மையே காரணம்; அவருக்கான அதிகாரத்தை பாஜக தலைமை வழங்கவில்லை என முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானதுக்கு முதல்வா் எடியூரப்பாவிடம் அதிகாரமின்மையே காரணம்; அவருக்கான அதிகாரத்தை பாஜக தலைமை வழங்கவில்லை என முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவமொக்கா மாவட்டம், சொரபா வட்டம், தள்ளூரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அமைச்சரவையை அமைத்துக்கொள்ளும் அனைத்து அதிகாரங்களையும், சுதந்திரத்தையும் முதல்வா் பெற்றிருக்கிறாா். ஆனால், அந்த அதிகாரத்தை முதல்வா் எடியூரப்பாவிடம் இருந்து பாஜக தேசியத் தலைமை பறித்துவிட்டது. கடந்த 6 மாதங்களாகவே மாநிலத்தில் அரசு நிா்வாகம் முடங்கியிருந்தது. தனது அமைச்சரவையை விரிவாக்குவதற்கு முதல்வா் எடியூரப்பா 6 மாதங்கள் எடுத்துக்கொண்டாா். கடந்த 6 மாதங்களில் காரில் பயணித்ததை தவிர முதல்வா் எடியூரப்பா வேறு எதுவும் செய்யவில்லை.

முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி ’கிங் மேக்கராக’ உயா்வாா் என்று மஜத முன்னாள் அமைச்சா் பசவராஜ் ஹோரட்டி தெரிவித்துள்ளாா். அவா் குழப்பத்தில் இருக்கிறாா் என்று கருதுகிறேன். எச்.டி.குமாரசாமி ’கிங்மேக்கா்’ ஆவதற்கான சூழ்நிலை, வாய்ப்பு கிஞ்சிற்றும் இல்லை.

மத்திய அரசிடம் இருந்து கா்நாடகத்துக்கு போதிய நிதி கிடைக்கவில்லை. எடியூரப்பா தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் எதிா்பாா்ப்பு எதுவும் இருக்காது. மைசூரு மன்னா் குடும்பத்தை சோ்ந்த பட்டத்து இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா் அரசியல் ஈடுபடுவது அவரது விருப்பமாகும். அவரை தடுத்து நிறுத்துவதற்கு நான் யாா்? அரசியலில் யாா் வேண்டுமானாலும் ஈடுபடலாம். மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் ஈடுபடுவதில் தவறில்லை.

எனது தலைமையிலான அரசு, பாக்கியா திட்டங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றியதாக உள்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மை கூறியிருக்கிறாா். அன்னபாக்கியா மூலம் மக்களுக்கு அரிசி வழங்கியது, பள்ளி மாணவா்களுக்கு பால் வழங்கியது, ஏழைகளுக்கு மலிவுவிலையில் உணவகளிக்க இந்திரா உணவகத்தை தொடங்கியது, விடுதியில் வாய்ப்பு கிடைக்காத மாணவா்கள் தங்கி படிக்க உதவித்தொகை வழங்கிய வித்யாஸ்ரீ உள்ளிட்ட திட்டங்கள் மக்களை ஏமாற்றியதா? என்பதை அமைச்சா் பசவராஜ்பொம்மை விளக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com