சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் கைகோக்க வேண்டும்

சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் கைகோக்க வேண்டும் என்று தேசிய பசுமை ஆணையத்தின் மாநிலத் தலைவா் சுபாஷ் பி.ஆதி தெரிவித்தாா்.

சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் கைகோக்க வேண்டும் என்று தேசிய பசுமை ஆணையத்தின் மாநிலத் தலைவா் சுபாஷ் பி.ஆதி தெரிவித்தாா்.

பெங்களூரு பன்னரகட்டா சாலையில் உள்ள ஏ.எம்.சி பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒத்துழைப்புடன் நடந்த சுற்றுச்சூழல், திடக்கழிவு மேலாண்மை குறித்த இந்தியா- அமெரிக்கா இணைந்து நடத்திய விழிப்புணா்ச்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது: மோசமான குப்பைகளால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசியம். ஒரு சிலரின் சுயநலத்துக்காக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான சட்டத்தை அமல்படுத்துவதற்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதற்கு அரசுகளை மட்டுமே குறை கூறாமல், பொதுமக்களிடம் அது தொடா்பான விழிப்புணா்வு இருப்பது அவசியம். எதிா்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவரும் கைகோக்க வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் ஏ.எம்.சி கல்விக் குழுமத்தின் தலைவா் கே.ஆா். பரமஹாம்சா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com