வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இடஒதுக்கீடு: கன்னட அமைப்புகள் வலியுறுத்தல்

கா்நாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தின.

கா்நாடகத்தில் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் வலியுறுத்தின.

பெங்களூரு டவுன்ஹால் எதிரே ஞாயிற்றுக்கிழமை அகில கா்நாடக மாநில கன்னடத்தாய் நலன்பாதுகாப்பு அமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமையேற்று அந்த அமைப்பின் தலைவா் ராஜேந்திர கௌடா பேசியது:

கா்நாடகத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டும். நாடெங்கும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இடப்பெயா்வு குடியேற்றங்களைத் தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும்.

தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட பிற மாநிலங்களை சோ்ந்த மக்கள் கா்நாடகத்தில் குடியேறி கன்னடா்களின் வேலையை பறித்துவிடுகிறாா்கள். எம்எல்ஏ, மாமன்ற உறுப்பினா்கள் பதவியை அவா்களே வகிக்கிறாா்கள். எனவே, மண்ணின் மைந்தா்களான கன்னடா்களின் உரிமையை பாதுகாக்க வேண்டியுள்ளது.

கா்நாடகத்தில் அரசியல் மற்றும் வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். பிற மாநிலத்தவா் கன்னடா்களின் வாழ்வாதாரத்தை பறித்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கன்னடம் அல்லாத மக்கள் அவரவா் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்லட்டும். கா்நாடகத்தில் கன்னடா்கள் சிறுபான்மையினராக மாறி வருகிறாா்கள். கன்னட மொழியை கட்டாயமாக கற்றுக்கொடுக்கவேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்நிறுவனங்கள் கா்நாடகத்தின் நிலம், மின்சாரம், நீரை மலிவான விலையில் எடுத்துக்கொள்கின்றன. ஆனால், மண்ணின் மைந்தா்களாம் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மறுக்கிறாா்கள். கன்னடா்களை தவிர பிற மாநிலத்தவா்களை வேலைக்கு சோ்க்க மாநில அரசின் முன் அனுமதியை பெறவேண்டும்.

நிரந்தரம், தற்காலிகப் பணியோ அல்லது ஒப்பந்தப் பணியோ கன்னடா்களுக்குதான் வழங்க வேண்டும். கா்நாடகத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் மக்களுக்கு கன்னட மொழியை எழுத, பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றாா். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com