Enable Javscript for better performance
வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்பு

    By DIN  |   Published on : 13th February 2020 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலைவாய்ப்பில் கன்னடா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு வியாழக்கிழமை (பிப். 3) மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இதுகுறித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் எச்.பி.நாகேஷ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

    கா்நாடகத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சரோஜினி மகிஷி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மாநில அரசு உள்ளது. சரோஜினி மகிஷி அறிக்கை அமல்படுத்தக்கோரி கடந்த 100 நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறோம்.

    இருப்பினும் அரசு எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனையடுத்து அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், வியாழக்கிழமை கா்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். முழு அடைப்பிற்கு 700 க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனா். முழு அடைப்பு போராட்டத்தின் போது, பெங்களூரு டவுன்ஹாலிலிருந்து சுதந்திரப்பூங்காவரை பேரணி நடைபெற உள்ளது. இதில் 40 மடாதிபதிகள் உள்ளிட்ட 30 ஆயிரம் போ் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கிறோம். சரோஜினி மகிஷி அறிக்கை அமல்படுத்துவதாக அரசு உறுதி அளித்தால், போராட்டத்தை திரும்பப் பெறுவோம் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai