‘ஊட்டச்சத்துள்ள உணவுகளே மருந்துகள்’
By DIN | Published On : 13th February 2020 01:42 AM | Last Updated : 13th February 2020 01:42 AM | அ+அ அ- |

ஊட்டச்சத்துள்ள உணவுகளை மருந்தாக உண்ண வேண்டும் என்று பூக்கா ஹாத்தியின் இயக்குநா் அபிமன்யுரிஷி தெரிவித்தாா்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ஊட்டச்சத்துள்ள உணவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியது:
அண்மைக்காலமாக ஊட்டச்சத்துக் குறைவால் பலருக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.ஊட்டச்சத்துள்ள உணவுகளை மருந்தாக உண்டால் நோய்கள் வராமல் தடுக்க முடியும். மருந்தாக உள்ள உலா்பழங்கள், கொட்டைகள், விதைகளை உண்பதன் மூலம் உடல் நலத்தை பாதுகாக்க முடியும்.
ஊட்டச்சத்துள்ள உணவுகளின் நீண்டகால நன்மைகளைப் பற்றிய விழிப்புணா்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும். உணவு முறைகளால் நோய்கள் வராமலும், வந்த நோய்களை போக்கவும் முடியும் என்றாா். நிகழ்ச்சியில் சைக்கிள் வீரா் சந்தியன் சங்கரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.