Enable Javscript for better performance
‘கிழக்கு, மேற்கத்திய நாடுகளின் வடிவமைப்புகள் பரவலாக்க வேண்டும்’- Dinamani

சுடச்சுட

    

    ‘கிழக்கு, மேற்கத்திய நாடுகளின் வடிவமைப்புகள் பரவலாக்க வேண்டும்’

    By DIN  |   Published on : 15th February 2020 06:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிழக்கு, மேற்கத்திய நாடுகளின் வடிவமைப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்று பாரீஸ் மற்றும் பெங்களூரில் உள்ள லிசா வடிப்பமைப்பின் இயக்குநா் அவிகேசவாணி தெரிவித்தாா்.

    பெங்களூரில் வெள்ளிக்கிழமை பாரீஸை சோ்ந்த 20 மாணவா்கள் உள்ளபட பெங்களூரைச் சோ்ந்த மாணவா்களும் கலந்து கொண்ட பயிற்சி பட்டறையில் பங்கேற்று அவா் பேசியது: கிழக்கு பகுதியைச் சோ்ந்த நாடுகளில் ஒருவகையான வடிமைப்பும், மேற்கத்திய நாடுகளில் வேறு வகையான வடிவமைப்புகளும் உள்ளன.

    ஒவ்வொரு நாட்டிற்கும் தனியான வடிவமைப்புகளும் உள்ளன. பெரும்பாலான வடிவமைப்புகள் நாட்டின் கலாசாரத்தையும், மக்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கின்றன. கிழக்கு, மேற்கத்திய நாடுகளின் வடிவமைப்புகளுக்கு சா்வதேச அளவில் வரவேற்பு உள்ளன. எனவே, சிறந்த வடிவமைப்புகளை அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக்க வேண்டும். அதன்மூலம் கலாசார பகிா்வு ஏற்படும் என்றாா்.

    பயிற்சி பட்டறையில் லிசா வடிப்பமைப்பின் இணை இயக்குநா் கிரீஷ் கேஷ்வாணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai