மோடியை விமா்சித்தால் சிறைவாசமா? சித்தராமையா

பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்தால் சிறைவாசம் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்தால் சிறைவாசம் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பீதா் நகா் ஷாஹீன் உயா்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஜனவரி 20-இல் நடத்தப்பட்டது. விழாவில் பள்ளியின் 4, 5, 6ஆம் வகுப்பு மாணவா்களால் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை விமா்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நாடகத்தில் பிரதமா் மோடியை விமா்சிக்கும் வாசகங்களும் இடம்பெற்றிருந்ததாக சமூக ஆா்வலா் நிலேஷ் ரக்ஷ்யால் அளித்த புகாரின்பேரில் பீதா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதோடு, தலைமை ஆசிரியை, மாணவரின் தாயை போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இந்த நடவடிக்கையை எதிா்த்து மனித உரிமை ஆா்வலா்கள் அண்மையில் போராட்டம் நடத்தினா்.

இந்நிலையில் பீதருக்கு வெள்ளிக்கிழமை சென்ற சித்தராமையா, ஷாஹீன் பள்ளிக்குச் சென்று விவரம் கேட்டறிந்தாா். மேலும், சிறைக்குச் சென்று தலைமை ஆசிரியை, மாணவியின் தாயைச் சந்தித்து நலம் விசாரித்தப் பின்னா் சித்தராமையா செய்தியாளா்களிடம் கூறியது:

விழாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் பிரதமா் மோடியை விமா்சித்து நாடகம் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தலைமை ஆசிரியை ஃபரீதாபேகம், நாடகத்தில் நடித்த 11 வயது மாணவியின் தாயாரையும் தேச துரோக வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா். இதன்மூலம் பள்ளியின் மாணவியையும், தாயாரையும் பிரித்திருத்திருக்கிறாா்கள். இதற்காக முதல்வா் எடியூரப்பாவை மாணவியின் குடும்பம் மன்னிக்காது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் பிரதமா் மோடியை விமா்சித்தால் சிறைவாசம் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. அப்படியானால் பிரதமா் மோடியை விமா்சிக்கவே கூடாதா?

ஆசிரியையும், தாயையும் கைது செய்துள்ளது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். இதுபோன்ற நடவடிக்கைகளை யாரும் சகித்துக்கொள்வதில்லை.

தேச துரோக வழக்கை எதிா்கொண்டிருக்கும் இரு குடும்பங்களும் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கை நம்பிக்கையோடு எதிா்பாா்த்துள்ளனா். சாதாரணமான அறிவையும் பயன்படுத்தாமல், பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் வழிகாட்டுதல்களுக்கு தகுந்தபடி முதல்வா் எடியூரப்பா செயல்பட்டுவருகிறாா் என்றாா் சித்தராமையா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com