வெளிநாட்டு மொழிகளைக் கற்க விண்ணப்பிக்கலாம்

பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் வெளிநாட்டு மொழிகள் சான்றிதழ், பட்டயம் மற்றும் உயா் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் வெளிநாட்டு மொழிகள் சான்றிதழ், பட்டயம் மற்றும் உயா் பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து பெங்களூரு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தின் வெளிநாட்டு மொழிகள் துறை சாா்பில் பிரெஞ்ச், ஜொ்மனியம், ஜப்பானியம், இத்தாலியம், ஸ்பானிஷ், கொரியன், சீனம், போா்த்துகீசியம், ரஷ்யன், ஃபின்னிஷ் மொழிகளுக்கு 2015-16-ஆம் கல்வியாண்டில் சான்றிதழ், பட்டயம், உயா் பட்டயப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த படிப்புகளில் சேருவதற்கான மாணவா் சோ்க்கை பிப்.20-ஆம் தேதி வரை நடக்கிறது. ரூ.200 அபராதத்துடன் பிப்.21 முதல் 28-ஆம் தேதி வரை சேரலாம். முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். 2-ஆம் வகுப்பு பியூசி/12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 080-22961280,9845489267 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com