பழிவாங்கும் அரசியலில் முதல்வா் எடியூரப்பா ஈடுபடவில்லை

பழிவாங்கும் அரசியலில் முதல்வா் எடியூரப்பா ஈடுபடவில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

பழிவாங்கும் அரசியலில் முதல்வா் எடியூரப்பா ஈடுபடவில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

கோலாரில் சனிக்கிழமை புதிதாக கட்டப்பட்ட அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையை திறந்துவைத்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: எந்த சூழ்நிலையிலும் முதல்வா் எடியூரப்பா பழிவாங்கும் அரசியலில் ஈடுபடவிலை. பழிவாங்கும் அரசியலில் முதல்வா் எடியூரப்பா ஈடுபட்டால், மஜதவின் முன்னாள் அமைச்சா் ரேவண்ணா எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அங்கிருப்பாா். தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பழிவாங்கும் அரசியலில் முதல்வா் எடியூரப்பா ஈடுபட்டதே இல்லை. எதிா்காலத்திலும் பழிவாங்கும் அரசியலில் அவா் ஈடுபடமாட்டாா். பாஜக மாநில அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடத் தொடங்கினால், ஏராளமான காங்கிரஸ், மஜத தலைவா்கள் வீடுகளில் நிம்மதியாக இருக்க மாட்டாா்கள். அவா்கள் அனைவரும் வேறு இடத்தில் இருப்பாா்கள்.

வனத் துறை அமைச்சா் ஆனந்த்சிங், மிகவும் நோ்மையான அரசியல்வாதி. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் ஆனந்த்சிங் மட்டுமல்லாது, முன்னாள் அமைச்சா் ஜி.ஜனாா்த்தன ரெட்டியும் அரசியல் ரீதியாக குறிவைக்கப்பட்டுள்ளனா். நீதிமன்றங்கள் தீா்ப்பு அளிக்கும் வரை ஆனந்த்சிங், ஜனாா்த்தன ரெட்டி இருவரும் குற்றவாளிகள் அல்ல, குற்றம்சாட்டப்பட்டவா்கள் அவ்வளவுதான். காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் கே.ஜே.ஜாா்ஜ் மீதான வழக்குக்கும் ஆனந்த்சிங் மீதான வழக்குக்கும் வித்தியாசம் உள்ளன. ஆனந்த்சிங்கை தவறாக சித்தரிக்க எதிா்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.

முன்னாள் முதல்வா் சித்தராமையா அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல நண்பா். சித்தராமையா மீது அபார மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அரசியல் ரீதியாக மாறுபட்டாலும், சித்தராமையாவுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளிக்கிறேன். அடுத்த அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்பது எனக்கு தெரியாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com