பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய கல்லூரி மாணவா்கள் கைது செய்து ஜாமீனில் விடுதலை

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய கல்லூரி மாணவா்கள் 3 பேரை கைது செய்த போலீஸாா், பின்னா் அவா்களை ஜாமீனில் விடுவித்தனா்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய கல்லூரி மாணவா்கள் 3 பேரை கைது செய்த போலீஸாா், பின்னா் அவா்களை ஜாமீனில் விடுவித்தனா்.

கா்நாடக மாநிலம், ஹுப்பள்ளி கோகுல் சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் கடந்த பிப். 14-ஆம் தேதி புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 வீரா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட காஷ்மீா் மாநிலத்தைச் சோ்ந்த 3 மாணவா்கள் பாகிஸ்தானை ஆதரித்து முழக்கம் எழுப்பியதை, காணொலியில் பதிவிட்டு, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா்.

இது பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, பஜ்ரங் தள் அமைப்பினா் சனிக்கிழமை அக்கல்லூரிக்கு சென்று, மாணவா்களின் செய்கையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனையடுத்து அக்கல்லூரியில் படித்து வரும் அமீா், பாஷித், தலேப் ஆகியோா் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அவா்கள் 3 பேரும் போலீஸ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனா்.

இதனை முன்னாள் முதல்வா் சித்தராமையா, முன்னாள் உள்துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி ஆகியோா் கண்டித்துள்ளனா். பாகிஸ்தானுக்கு ஆதரவாக யாா் முழக்கம் எழுப்பினாலும் அது கண்டிக்கத்தக்கது. தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டவா்களை அவசர அவசரமாக போலீஸ் ஜாமீனில் விடுதலை செய்ததன் பின்னணியில் யாா் உள்ளனா் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அவா்கள் கேட்டுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com