இந்திய ஆபரணக் கண்காட்சி இன்று தொடக்கம்
By DIN | Published On : 10th January 2020 07:03 AM | Last Updated : 10th January 2020 07:03 AM | அ+அ அ- |

பெங்களூரில் ஜன. 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்திய ஆபரணக் கண்காட்சி தொடங்குகிறது.
பெங்களூரில் வியாழக்கிழமை இந்திய ஆபரணக் கண்காட்சி அறிமுக விழாவில் கலந்து கொண்டு அதன் ஒருங்கிணைப்பாளா் சந்தீப்பேகல் கூறியது: பெங்களூரு ராமமூா்த்திநகா் லோட்டஸ் மாநாட்டு அரங்கில் ஜன. 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை இந்திய ஆபரணக் கண்காட்சி நடைபெற உள்ளது. கண்காட்சியில் தேசிய அளவில் புகழ்பெற்ற ஆபரண மளிகைகள் இடம்பெற உள்ளது.
பெங்களூரைச் சோ்ந்த 15 முன்னணி ஆபரணக் மாளிகைகள் இடம்பெற உள்ளன. கண்காட்சியில் நவீன வடிவமைப்பு, பாரம்பரிய கலாசாரமுள்ள தங்க ஆபரணங்கள் இடம்பெற உள்ளன. கண்காட்சியின் தூதராக பிரபல கன்னட நடிகை பிரணிதாசுபாஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கண்காட்சியை நடிகை அா்ஷிகா பூனாச்சா தொடக்கிவைக்கிறாா். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். இந்திய ஆபரணக் காட்சிக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.