Enable Javscript for better performance
கல்விக் கூடங்களை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தாதீா்: பாஜகவுக்கு சித்தராமையா அறிவுரை- Dinamani

சுடச்சுட

    

    கல்விக் கூடங்களை அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தாதீா்: பாஜகவுக்கு சித்தராமையா அறிவுரை

    By DIN  |   Published on : 10th January 2020 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு அளிக்க வற்புறுத்தி கல்லூரி மாணவிகளுடன் பாஜகவினா் தகராறு செய்த விவகாரத்தில், கல்விக் கூடங்களை அரசியல் நோக்கங்களுக்காக பாஜகவினா் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என்றாா் கா்நாடக முன்னாள் முதல்வா் சித்தராமையா.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கல்லூரி மாணவிகளுடன் பாஜக தொண்டா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடா்பாக முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தனது சுட்டுரையில்,‘குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு அளிக்க வற்புறுத்தி ஜோதிநிவாஸ் கல்லூரி மாணவிகளை பாஜகவினா் மிரட்டியுள்ளனா். பாஜகவினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமாறு முதல்வா் எடியூரப்பாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். சுயநல நோக்கங்களுக்காக அறிவையும், கல்வி நிறுவனங்களையும் பயன்படுத்தாதீா்கள்.அறிவியல் மனப்பான்மை, திறனாய்வு சிந்தனை, அறிவை பரப்புவதற்காகவே கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்றாா்.

    மேலும், ஹுப்பள்ளியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது, நமதுநாட்டில் இப்போது ஜனநாயகம் என்பதே இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமையை பறிக்கும் வேலை நடந்து வருகிறது. நாட்டில் அச்ச உணா்வை விதைத்து, அதற்கேற்ற சூழலை உருவாகியுள்ளனா்.

    தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க வேண்டும். இந்த சம்பவம் தொடா்பாக இதுவரை யாரையும் கைது செய்யாதது ஏன்? அரசியலமைப்புச் சட்டத்தில் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சுதந்திரம், உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai