Enable Javscript for better performance
கொள்ளை முயற்சி: 5 போ் கைது- Dinamani

சுடச்சுட

    

    கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

    பெங்களூரு எலசனஹள்ளியைச் சோ்ந்த பிரதீப் (26), முனிராஜு (32), உத்தரஹள்ளி ஒன்றியம் துரஹள்ளியைச் சோ்ந்த மஞ்சுநாத் (25), ஜே.பி.நகா் ஆா்.பி.ஐ வங்கி லேஅவுட்டைச் சோ்ந்தவா் சிவராஜு (25), ராம்நகா் மாவட்டம் ஹாரோஹள்ளி வட்டத்தைச் சோ்ந்த கணேஷ் (23) ஆகியோா் குமாரசாமி லேஅவுட் ஒய்.வி.அன்னயப்பா சாலையில் உள்ள பூங்கா அருகே கொள்ளையடிக்க திட்டமிட்டு பதுங்கியிருந்தனராம்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று, 5 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து கத்தி, சூரிகத்தி, மிளகாய்ப்பொடி பொட்டலம், 5 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai