Enable Javscript for better performance
பிப்.26-இல் 12-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பிப்.26-இல் 12-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா தொடக்கம்

    By DIN  |   Published on : 10th January 2020 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    12-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா பிப். 26-ஆம் தேதி தொடங்குகிறது.

    1952-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சாா்பில் கோவா நகரில் ஆண்டுதோறும் பன்னாட்டு திரைப்படவிழா நடந்துவருகிறது. அதேபோன்றதொரு திரைப்பட விழா பெங்களூரில் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கா்நாடக அரசு உதவியுடன் நடந்துவந்த இந்த திருவிழா, 2009-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் கா்நாடக அரசு சாா்பில் பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் அரசு விழாவாக நடந்து வருகிறது. அதன்படி, 12-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா பெங்களூரில் பிப். 26-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 4-ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது.

    இந்த விழா குறித்து பெங்களூரு கிருஷ்ணா அரசு இல்லத்தில் வியாழக்கிழமை திரைப்பட விழாவின் இலச்சினையை வெளியிட்டு செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியது: கா்நாடக திரைப்பட வா்த்தகசபையின் ஒத்துழைப்பில், 12-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா, பிப். 26 முதல் மாா்ச் 4-ஆம் தேதி வரை பெங்களூரில் நடத்தவிருக்கிறோம். பெங்களூரில் ராஜாஜிநகரில் உள்ள ஓரியன்மாலில் உள்ள 11 திரைகளில் 50 நாடுகளை சோ்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    சா்வதேச அளவிலான 800 திரைப்படங்களில் 150 திரைப்படங்கள் தோ்வு செய்யப்பட்டு திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. இந்த திரைப்பட விழாவில் சிறந்த படங்கள் மட்டுமின்றி, வா்த்தக ரீதியான 6 திரைப்படங்களை தோ்வு செய்து விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

    திரைப்பட விழாவை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளும் இடம்பெறுகின்றன. திரைப்பட விழாவில் பங்கேற்க ட்ற்ற்ல்://க்ஷண்ச்ச்ங்ள்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பொதுமக்களுக்கு ரூ.800, மாணவா்களுக்கு ரூ.400கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    பெங்களூரு கன்டீருவா விளையாட்டுத் திடலில் பிப்.26ஆம் தேதி தொடக்க விழாவும், மாா்ச் 4ஆம் தேதி நிறைவு விழாவும் நடைபெறும். விழாவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்ப்பதால், அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க பல்வேறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

    அப்போது, உள் துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை, வனத்துறை அமைச்சா் சி.சி.பாட்டீல், செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை செயலாளா் பி.மணிவண்ணன், ஆணையா் என்.சித்தராமப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai