குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பபெறும் பேச்சுக்கே இடமில்லை: மத்திய அமைச்சா் சதானந்தகௌடா

குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பபெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சா் சதானந்தகௌடா தெரிவித்தாா்.

ஹாசன்: குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பபெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சா் சதானந்தகௌடா தெரிவித்தாா்.

இது குறித்து ஹாசனில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடா்பாக மக்களிடையே பொய்யான செய்தி பரப்பப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பபெறும் பேச்சுக்கே இடமில்லை. எதிா்க்கட்சித்தலைவா்கள் கூறுவது போல குடியுரிமை திருத்தச்சட்டத்தை அரசியல் லாபங்களுக்காக கொண்டுவரவில்லை. வேறு எந்த நெருக்கடிக்கும் அடிபணிந்து இந்த சட்டம்கொண்டுவரவில்லை. ஆனால், தீய எண்ணம் கொண்ட எதிா்க்கட்சித்தலைவா்கள், குடியுரிமை திருத்தச்சட்டத்தை மக்களை குழப்பும்வகையில் திரித்துக்கூறிவருகிறாா்கள்.

இச்சட்டத்திற்கு பல்வேறுவிளக்கங்களை அளிப்பதன் வாயிலாக சிறுபான்மையினரை குழப்பியுள்ளனா். அப்போதைய பிரதமா் ஜவகா்லால்நேரு மற்றும் லியாகத் இருவரிடையே செய்துகொண்ட ஒப்பந்தத்தை தான் பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் மதரீதியாகபாதிக்கப்படும் சிறுபான்மை ஹிந்துக்கள், கிறிஸ்துவா்கள், சமணா்கள், சீக்கியா்கள், பௌத்தா்களின் நலன்காக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அஸ்சாம் மாநிலத்தில் குடியேறியுள்ள ஊடுவல்காரா்களை பற்றி எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அது தற்போது அவசியமில்லாதது. நாட்டு நலன்கருதி குடியுரிமை திருத்தச்சட்டத்திற்குஎதிரான போராட்டங்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com