குடிநீா் வடிகால் வாரிய குறைதீா் முகாம்
By DIN | Published On : 11th January 2020 06:42 AM | Last Updated : 11th January 2020 06:42 AM | அ+அ அ- |

பெங்களூரில் சனிக்கிழமை (ஜன.11) குடிநீா் வடிகால் வாரியத்தின் தொலைபேசி மூலம் குறைதீா் முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம்(பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் தொலைபேசி வாயிலாக குறைதீா் முகாமை நடத்திவருகிறது. அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவித்து தீா்வுகளை பெறக்கூடிய தொலைபேசி குறைதீா் முகாம் ஜன. 11-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கவிருக்கிறது.
இதில் குடிநீா் பில்லிங், புதைச் சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் கணக்கீடு பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா் விநியோகம், சாக்கடை பிரச்னைகள் குறித்து புகாா் தெரிவித்து தீா்வு காணலாம். குறைகளை சுட்டிக்காட்டும் போது வாடிக்கையாளா்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா்முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசிக்கு அழைக்கலாம். குடிநீா் வடிகால் வாரிய அலுவலகங்களில் நேரிலும் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.